எம்பிபிஎஸ் படித்த மாணவர்களுக்கு புதிய தேர்வு: அடுத்த ஆண்டு முதல் அமல் என அறிவிப்பு..!

வெள்ளி, 9 ஜூன் 2023 (15:11 IST)
எம்பிபிஎஸ் படித்த மாணவர்களுக்கு புதிய தேர்வு அடுத்த ஆண்டு முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
எம்பிபிஎஸ் முடித்த மாணவர்கள் மருத்துவராக பணியாற்றவும், வெளிநாடு சென்று மருத்துவம் பயின்று இந்தியாவில் பதிவு செய்யவும், நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் என்ற நெக்ஸ்ட் என்ற பொது தேர்வு நடத்தப்படும் என்றும் இது அடுத்த ஆண்டு முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
முதுநிலை நீட் தேர்வு மற்றும் இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வு ஒருங்கிணைத்து இந்த நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்பட ஒப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
 
இதற்கு மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆதரவு தெரிவிப்பார்களா அல்லது எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்