சமீபத்தில் கேரளா சென்ற சச்சின், கேரள முதலவர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். மேலும், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 4வது சீசனின் தொடக்கவிழாவில் கலந்து கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
அதன் பின், சாலையில் சென்று கொண்டிருந்த அவர் திடீரென கார் கண்ணாடியை இறக்கி, சாலையில் செல்பவர்களிடம் ஹெல்மெட் அணிந்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். திடீரெனெ அவரை பார்த்த வாகன ஓட்டிகள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர்.