சபரிமலை விவகாரம் குறித்து இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை: சமாதானம் ஏற்படுமா?

வெள்ளி, 19 அக்டோபர் 2018 (07:19 IST)
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னரும் ஒருசில அமைப்புகள் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்க முடியாது என்று போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் சபரிமலை அருகே பதட்டமான சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையில் சபரிமலை விவகாரம் குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. கேரள அரசு, தேவசம் போர்டு மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தினர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் என்பவர் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனை முடிவில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்றும் சபரிமலை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அக்டோபர் 22 ம் தேதி வரை, ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும் என்பதால் அதற்குள் ஒரு நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்