’நாட்டில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்பது மிகச் சிலர்தான்.எனவே ஒருசிலரின் கருத்துக்களை மாநிலத்தினுடைய கருத்தாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அரசியல் சாசனம் வழங்கிய தீர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நவீன உலகில் மேற்படுகிற மாற்றத்திற்கும்ஒத்துபோவதுடன் மதச்சார்பின்மைக்கு இழுக்கு வந்து வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர்.
ஆனால் மதர்சார்புடைய ஆர்.எஸ்.எஸ். ,பா.ஜ.க.ஆகியவைதான் மாநிலத்தில் குழப்பம் விளைவித்து இந்த கலவரத்தையும் தூண்டுகின்றனர்.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் முழங்கி வருகின்றனர்.இவர்கள் எவ்வளவு முயற்சி செய்து கலகம் விளைவித்தாலும் கேரள அரசு சட்டத்தை கடைபித்து அதன் வழிதான் மாநிலம் செல்லும்.’இவ்வாறு அவர் கூறினார்.