மேலும் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்தனர் என்றும் விவசாயிகள் உயிரிழப்பு குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். மத்திய அரசு பிறப்பித்த புதிய வேளாண்மை சட்டம் சமீபத்தில் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.