பொது அலுவலகங்களில் பிரதமர் மோடியின் படம் - பாஜக கோரிக்கை!
செவ்வாய், 30 நவம்பர் 2021 (15:32 IST)
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது பிரதமர் மோடியின் படமும் இடம்பெற வேண்டும் என்று பாஜக கோரிக்கை.
இதுகுறித்து பாஜகவின் மதுரை மாவட்ட தலைவர் பி.சரவணன் தெரிவித்தாவது, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது பிரதமர் மோடியின் படம் இடம்பெற வேண்டும் என்று பாஜக தலைமை விரும்புகிறது. இதை நாங்கள் தமிழக அரிசிடம் முறையிடுகிறோம்.
மத்திய அரசின் திட்டங்களில் மத்திய அரசின் பங்களிப்பும் உள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் முதல்வரின் படத்துடன் பிரதமரின் படத்தை பயன்படுத்த வலியுறுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் 1990 ஆம் ஆண்டு பொதுக் கல்வித்துறை பிறப்பித்த அரசாணையின் படி பிரதமர் உள்பட 9 தலைவர்களின் படங்கள் பொது அலுவலகங்களில் இடம்பெறலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.