இந்தியாவின் உயிரைப் பறிக்கும் கொரொனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. கொரொனா இரண்டாவது அலையில் தொற்றுக்குச் சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருவதால், தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மே 1 முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.