நமது அண்டை மாநிலம் கேரளம். அங்கு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.
கேரளாவில் தன் உறவுக்கார பள்ளி சிறுமி ஒருவரை 9 ஆண்டுகளாக( 6 வயது முதல் 13 வயது வரை) பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபரை( தாய்மாமன், 41 வயது) போக்சோ வழக்கில் கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிறுமியை 9 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபருக்கு 97 வருட சிறைத்தண்டனையுடன், ரூ.8 லட்சம் அபாரமும் விதித்து காசர்கோடு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.