அமைச்சரவை முதல் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தேதி குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாகவும், அதேபோல் இந்த வருடத்திற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் ஆந்திர முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சி வரும் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்திருந்தார்.