3வது முறையாக இன்று பிரதமராகும் மோடி; பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பு

Siva

ஞாயிறு, 9 ஜூன் 2024 (08:15 IST)
3வது முறையாக இன்று பிரதமராகும் மோடி பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு  தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர்  முகமது முய்ஸு, வங்கதேச பிரதமர்  ஷேக் ஹசீனா;  சீஷெல் துணை அதிபர் அகமது அஃபிஃப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹலும் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள இந்தியா  வருகை தந்துள்ளனர். அதேபோல் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே மற்றும் வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் 3-வது முறையாக நாட்டின் பிரதமராக இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில் சற்றுமுன் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி, சதைவ் அடல் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் நினைவிடங்களில் நரேந்திர மோடி மரியாதை செய்தார்.

மேலும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடிவை சிறப்பாக நடத்த குடியரசு தலைவர் மாளிகை விழாக்கோலத்தில் உள்ளது. இன்று பிரதமராக மோடி பதவியேற்றதும் அடுத்தகட்டமாக 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்