தலைவனுக்கு விருது... கலக்கும் மோடி ட்விட்!!

வியாழன், 1 ஏப்ரல் 2021 (11:31 IST)
தாதா சாகேப் பால்கே விருதை பெற்ற ரஜினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 
நடிகர் ரஜினிகாந்த் இந்திய திரைத்துறையில் அளித்த சிறந்த பங்களிப்பிற்காக மத்திய அரசு அவருக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, முதல்வர் பழனிசாமி  அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல ரஜினியின் நண்பராக கமல் தனது மகைழ்ச்சியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். 
 
இவர்களை தொடர்ந்து பிரதமர் மோடி, தாதா சாகேப் பால்கே விருது தலைவாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்