இந்தியாவில் கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட மாநிலங்களில் கேரளா முதன்மை இடம் வகிக்கிறது. இந்தியாவிலேயே முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,000 குள் உள்ளது. அம்மாநில அரசின் நடவடிக்கை மற்றும் மக்களின் ஒத்துழைப்பு காரணமாக கொரோனா கடந்த மாதம் வரை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
ஆனால் அந்த மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு தினமும் 200 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் அங்கு ட்ரிபுள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதற்குப் பலன் இல்லை. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் கொரோனா சமூகப் பரவலாகியுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் இதுவரை 1505 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.