இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எந்தெந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்ற பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் ஊழல், ஒட்டுக்கேட்பு, வெட்கக்கேடு ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளது.
மேலும், அராஜகவாதி, குண்டர்கள், காலிஸ்தான், சர்வதிகாரம், வாய்ஜாலம், நாடகம், கபட நாடகம் உள்ளிட்ட பல வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.