இவர் செவ்வாயன்று அதிகாலை தியோகர் மாவட்டத்தின் ரோஹினி கிராமத்திற்கு, தனது காரில் சென்றுள்ளார். அக்கிராமத்தில் இரவு நேரத்தில் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், கிராமவாசிகள் இரவு நேரங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அக்கிராமத்தின் வழியே வந்த மகேஷ் குமாரின் காரை நிறுத்தி விசாரித்துள்ளனர். இதனால், மகேஷ் குமாருக்கும், கிராமவாசிகளுக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதில், மகேஷ் குமார் மற்றும் அவரது கார் ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.