ஐ.என்.எக்ஸ் மீடிய நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடு பெறுவதில், அனுமதி அளிப்பதில் முறைகேடு செய்ததாகவும், ஊழல் செய்ததாகவும் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டு, தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி சிதம்பரத்தை சிறையில் சந்தித்து வருகின்றனர்.
சிதம்பரம், தனது சார்பாக அவரது குடும்பத்தினரை டுவிட்டரில் பதிவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, இன்று மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் ஆகையால், அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு டுவீட் செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
பொருளாதாரச் சரிவில் இருந்து நாட்டை மீட்க மன்மோகன் சிங்கின் ஆலோசனைகளை கேட்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன் ; தற்போது நாட்டில் இருக்கும் பொருளாதார சரிவில் இருந்து நாட்டை வெளியே கொண்டுவர அவரால் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார்.