டுவிட்டரில் போலி கணக்குகள் முடக்கம் : டுவிட்டர் நிறுவனம் அதிரடி

வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (17:05 IST)
இன்றைய உலகில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சாதனமே சமூக வலைதளங்கள்தான். இதில், உள்ளூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை அனைவரும் தன் பெயரில் கணக்கு தொடங்கி; அதில், சமூகம், நாடு, உலகம் குறித்து கருத்துக்கள் வெளியிடும் பொதுத்தளமாக டுவிட்டரை பயன்படுத்திவருகின்றனர். 

டுவிட்டரில் இன்றைய டிரெண்டிங் என்ன என்பதை அறிந்து, உலகில் நிலவுகின்ற பிரச்சனைகளை அறிந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதில் நெட்டிசன்கள் எழுப்புகின்ற கருத்துக்கள் உலக அளவில் கவனம் பெருகிறது. 
 
இந்த நிலையில், டுவிட்டரில் பல்வேறு பெயர்களில்  கணக்குகள் தொடங்கி  பல்வேறு பிரச்சனைகளை கிளப்பிவிடும் போலி கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
குறிப்பாக, டிவிட்டரில் பல பொய்யான செய்திகளை வழங்கிவந்த ஆயிரக்கணக்கான போலிக் கணக்குகளைக் கண்டறிந்து டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்