குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக ஓஎம்ஆர் தாள்களில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு ஜீரோ மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், யார் மருத்துவராக வேண்டும் என்பதை யாரோ ஒருவர் முடிவு செய்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதம் செய்யப்பட்டன
மேலும் தேர்வு முடிவுகள் மாற்றித் தருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் தவறானவை என்றும் தற்போது வைரல் ஆகி கொண்டிருக்கும் ஓஎம்ஆர் தாள்கள் அனைத்தும் போலியானவை என்றும், போலியான தகவல்களை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறான செய்தி அளிக்கும் நபர்களை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது