தமிழகம் போலவே தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் கடையில் பிரதமரின் புகைப்படத்தை வைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது குறித்து நேற்று தெலுங்கானா வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியபோது தெலுங்கானாவில் உள்ள கடைகளில் பாஜக தொண்டர்களால் வைக்கப்படும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் கிழிக்கப்படுகின்றன.
நாட்டு மக்களுக்காக சேவை செய்பவரின் புகைப்படத்தை வைக்க கூட தயங்குவது ஏன் என்ற கேள்வியை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுப்பினார். மேலும் இப்பொழுதே பிரதமரின் புகைப்படத்தை ரேஷன் கடைகளை வைக்க வேண்டும் என்றும் அதற்கு சேதம் ஏற்படாமல் இருப்பதை ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் நானே வருவேன் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.