இந்த நிலையில், சமீப காலமாக பல்வேறு ஊழல் வழக்குகளில் முக்கிய அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட சிலரை அமலாக்கத்துறை,ல் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்பு கைது செய்து வருகின்றனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு கூறி வருகின்றன. இந்த நிலையில், அமலாக்கத்துறை, வரித்துறை, சிபிஐ, என்.ஐ.ஏ ஆகிய மத்திய விசாரனை அமைப்புகளின் இயக்குநர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 10 எம்பிக்கள் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.