கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கேக் நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, நாளை தொடங்கி நாளை மறுநாள் வரை நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டமைப்பில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகின.
ஏற்கனவே ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் வரவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க எதுவும் திட்டமில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஷாங்காய் மாநாட்டிற்கு மோடி விமானத்தை பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்கு பாகிஸ்தான் அரசு அனுமதியும் வழங்கியது, ஆனால் தற்போது மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்காது என தெரியவந்துள்ளது.