நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி: மோடி வலையில் விழுவாரா ஜெகன்?

புதன், 12 ஜூன் 2019 (12:12 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தனது பக்கம் இழுக்க அவரின் கட்சிக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி மபெரும் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை பாஜகவிற்கு ஆதரவு தருமாறு கேட்கப்பட்டுள்ளதாம். 
 
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின் பிரதிநிதியாக பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகனை வி்ஜயவாடாவில் நேற்று சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் பதவி வழங்குவதற்கு பாஜக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது போலும். ஆனால், ஜெகன் இதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லையாம். 
 
ஆனால், கட்சியின் மூத்த தலைவர்களுடன் இது குறித்து ஆலோசித்து முடிவு செய்ய இருப்பதாக தெரிகிறது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்பதால் ஜெகன் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பார் என்றுதான் தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்