மிசோரம் அமைச்சரின் கால் தூசுக்கு சமம் ஆவார்களா நம் அமைச்சர்கள்?

புதன், 23 ஆகஸ்ட் 2017 (22:54 IST)
தங்களுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ள வாரம் ஒரு முறை டெல்லிக்கு சென்று சமாதானம் பேசும் தமிழக அரசியல்வாதிகளும் அமைச்சர்களும், மக்களுக்கு ஒரு குறை என்றால் கடிதம் எழுதுவதோடு நிறுத்தி கொள்கின்றனர்.



 
 
நீட் தேர்வில் ஆரம்பத்தில் இருந்தே சொதப்பிய தமிழக அரசு கடைசியில் அவசர சட்டத்திலும் கோட்டை விட்டது. இதன் பலன் நீட் தேர்வு வெற்றி பெற்று இன்று நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
 
மிசோரம் மாநிலத்தை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் புத்த தன் சக்மா என்பவர் தனது மாநிலத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் கவுன்சிலிங் நடந்ததால் மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்த 4 மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்
 
4 மாணவர்களுக்காகவே பதவியை துச்சமென மதித்த அமைச்சர் ஒருவரின் மத்தியில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதித்த நிலையிலும் ராஜினாமா குறித்த நம் அரசியல்வாதிகள் வாயை திறக்கவே இல்லை. மிசோரம் அமைச்சரின் கால்தூசுக்கு நம் அமைச்சர்கள் ஆகமாட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் டுவிட்டரில் படுகோபமாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்