மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோபர்டி எனும் கிராமத்தில் வசித்து வரும் 15 வயது சிறுமியை கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி மூன்று வாலிபர்கள் ஒன்றாக பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், அப்பெண்ணின் கை, கால்களை முறித்து அடித்து காயப்படுத்தினர். இறுதியில் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.