மிக்ஸிங்குக்கு தண்ணீர் கொடுக்காததால் கொலை செய்த விபரீதம்!

வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (17:11 IST)
ஹரியானாவில் மதுக்கடை ஒன்றில் சரக்குக்கு மிக்ஸிங் செய்ய தண்ணீர் கொடுக்காத நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹரியானாவில் இருக்கும் சிறிய மதுக்கடை ஒன்றுக்கு நரேஷ் குமார் என்ற நபர் அவரது தந்தை மஹாபிர் என்பவருடன் மது அருந்து சென்றுள்ளார். அந்த கடையில் ஏற்கனவே மது அருந்திக்கொண்டு இருந்த நான்குபேர் இவர்களிடம் மதுவில் கலக்க தண்ணீர் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
 
ஒவ்வொரு முறையும் தண்ணீர் இல்லை என்று சொல்லும்போது சண்டை பெரிதாகி உள்ளது. இதனையடுத்து அவர்கள் நரேஷ் குமாரை தாக்கிவிட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர். ஆனால் கொஞ்ச நேரத்தில் மீண்டும் அவர்கள் அங்கு வந்தனர்.
 
அப்போது அதில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து நரேஷ் குமாரின் கழுத்தில் சுட்டுள்ளார். இதானல் கழுத்தில் குண்டு பாய்ந்த நரேஷ் சுருண்டு விழுந்து அங்கேயே இறந்தார். அந்த நான்கு பேரில் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்