சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் அகற்றம் என குற்றச்சாட்டு கூறியுள்ள ஜெய்ராம் ரமேஷ், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து தலைவர்கள் சிலைகள் அகற்றப்பட்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது கொடுமையான விஷயம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இது மத்திய அரசின் அட்டூழியமான செயல் என்றும், தலைவர்களின் சிலைகளை அகற்றுவது அராஜகமான நடவடிக்கை என்றும், மறைந்த தலைவர்களை அவமானப்படுத்தும் செயல் எனவும் தனது சமூக வலைத்தளத்தில் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளதை அடுத்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.