கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?

Mahendran

புதன், 10 ஏப்ரல் 2024 (15:51 IST)
கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார்  திடீரென ராஜினாமா செய்துவிட்டு தனது ராஜினாமாவிற்கு என்ன காரணம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி மற்றும் மே 7ஆம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 28ஆம் தேதி தொடங்கியது

பாஜக மற்றும் ஜனதா தளம் எஸ் கட்சி கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்தித்து வரும் நிலையில் வேறு சில கட்சிகளும் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்டி குமார் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்
 
கர்நாடக மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் இதனால் பதவியில் இருந்து விலகிக் கொண்டேன் என்றும் யாரை ஆதரித்து பிரச்சாரம் செய்வது என்று தெரியாமல் கர்நாடக அதிமுகவினர் உள்ளனர் என்றும் தெரிவித்தார்

மேலும் அவர் மட்டும் இன்றி கர்நாடக மாநில அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. பிற மாநிலங்களில் கட்சியை ஏன் வளர்க்க வேண்டும் என்று அதிமுக மேலிடம் நினைப்பதாகவும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கர்நாடகாவில் அதிமுக நிலைமை ரொம்ப மோசம் என்றும் எஸ்.டி.குமார் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்