இந்தியா வரும் அமேசான் நிறுவனர்: மோடியை சந்திப்பாரா?

வெள்ளி, 10 ஜனவரி 2020 (11:47 IST)
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெஸோஸ் இந்தியா வரும் நிலையில் பிரதமரை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறு, குறி தொழில்களை தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்துவது குறித்த நிகழ்ச்சி ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. தொழில் வல்லுனர்கள் மற்றும் பலதுறை நிபுணர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் அமேசான் உரிமையாளர் ஜெப் பெஸோஸ் பங்கேற்க உள்ளார்.

சமீப காலத்தில் இந்தியாவின் மிகப்பெரும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமாக அமேசான் வளர்ந்துள்ளது. பல சிறு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை அமேசான் மூலம் தேசிய அளவில் விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாக கூறப்படும் நிலையில், அமேசான் போன்ற நிறுவனங்களால்தான் சிறு, குறு தொழில்கள் நசிந்து விட்டதாகவும் புகார்கள் உள்ளன. இந்நிலையில் ஜெப் பெசோஸ் இந்தியா வருவது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா வரும் ஜெப் பெஸோஸ் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்