ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நேற்று இரவு 10 மணியிலிருந்து 12 மணிக்குள் தொடர்ந்து நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதலில் 10.42 மணியளவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சில நிமிடங்களில் 5.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.