ஜம்மு காஷ்மிருக்கான சிறப்பு அந்தஸ்த்து சமீபத்தில் இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பழிவாங்கும் விதமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக குஜராத் போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. மேலும் அந்த பயங்கரவாதிகள் குஜராத் வழியாக ராஜஸ்தான் மாநிலத்துக்குள் செல்ல முயற்சிப்பதாகவும் தெரியவந்தது.
ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ராஜஸ்தான் மட்டுமல்லாது மஹாராஷ்ரா, பஞ்சாப், உத்திரபிரதேசம் ஆகிய இடங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என கருதப்படுவதால், அந்த மாநிலங்களிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளது.