பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்ட திருத்த மசோதா மக்களைவையில் நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்த மசோதா நிறைவேறியுள்ள நிலையில் ’இது மோடி அரசின் இந்துத்துவ சிந்தனையை செயல்படுத்துவதாக உள்ளது’ என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் மோடியின் பாஜக அரசு இஸ்லாமியர்களை திட்டமிட்டு புறம் தள்ளிவதாகவும், வங்காளத்திலிருந்து இந்துக்களும், இஸ்லாமியர்களும் கூட நிறையே பேர் இந்தியாவில் வந்து வாழ்ந்து கொண்டிருக்க அரசு இஸ்லாமியர்களை மட்டும் திருப்பியனுப்பும் நோக்கில் சட்டம் இயற்றியுள்ளதாகவும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.