கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசால் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்கட்சிகள், பல்கலை, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மோடிக்கு எதிராகப் பேசியவர்கள் உயிருடம் எரிக்க வேண்டும் என பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அம்மாநில துணைமுதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா பங்கேற்றார். அப்போது பேசிய அமைச்சர் ரகுராஜ் சிங், வரி செலுத்துபவர்களின் பணத்தில் படித்த பின், முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி மற்றும் உத்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பேசி வருகிறார்கள். அப்படி பேசியவர்கள் உயிருடம்ன் எரிக்கப்படுவீர்கள் என பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே CCA க்கு ஆதரவு தெரிவித்து, மேற்கு வங்க மாநிலம் அதியா என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக தலைவர் கலந்து கொண்டு,பொதுச் சொத்துகளை யாராவது சேதப்படுத்தினால் சுட்டு வீழத்துவோம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.