எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்

புதன், 22 மே 2019 (15:30 IST)
ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
ஒரு சட்டசபைக்கு 5 ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டு அது வாக்கு எந்திரத்தில் உள்ள தகவலோடு பொருந்தி போகிறதா என ஆராயப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த ஒப்புகை சீட்டுகள் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு கடைசியாக எண்ணப்படும் என்னும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சிகள் ஒப்புகை சீட்டுகளை முதலிலேயே எண்ண வேண்டும் என கோரிக்கை வைத்தன. இத தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.
 
இந்நிலையில் ஒப்புகை சீட்டுகளை முதலிலேயே எண்ண வேண்டும். வாக்கு எந்திரத்தின் தகவலோடு அது வேறுபடும் நிலையில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என 22 எதிர்கட்சிகள் இணைந்து உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்