இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

Mahendran

சனி, 18 மே 2024 (12:52 IST)
ஆந்திராவில் சிறுவனுக்கு திடீரென இதயம் என்ற நிலையில் அவரைப் பெண் மருத்துவர் முதலுதவி செய்து காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திராவில் விஜயவாடா என்ற பகுதியில் 6 வயது சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அந்த சிறுவன் தூக்கி எறியப்பட்ட நிலையில் பேச்சு மூச்சு இன்றி கீழே விழுந்துவிட்டார் 
 
இதனை அடுத்து சிறுவனின் தந்தை அலறி அடித்துக் கொண்டு தனது மகனை தோளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றார். இந்நிலையில் அந்த வழியாக  மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் ரவள்ளி அந்த பக்கம் சென்று கொண்டிருந்தபோது அந்த காட்சியை பார்த்து உடனே என்ன என்று விவரம் கேட்டார் 
 
இதனை அடுத்து சிறுவனை பரிசோதித்து விட்டு சாலையிலேயே படுக்க வைத்து சிறுவனின் மார்பில் இரண்டு கைகளையும் வைத்து அழுத்தினார். இதனை மருத்துவர் ரீதியாக சிபிஆர் என்று கூறப்படும் நிலையில் கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் அழுத்தியபிறகு அந்த சிறுவன் மெல்ல மூச்சு விட தொடங்கினார். இதனை அடுத்து அந்த சிறுவனுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டது 
 
தற்போது சிறுவன் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய பெண் மருத்துவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்