பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

Siva

வியாழன், 16 மே 2024 (08:43 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்பதும் அதை அடுத்து கர்நாடக உள்பட ஒரு சில வெளி மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தொடர் தேர்தல் பிரச்சாரம் காரணமாக அவரது காலில் வீக்கம் இருப்பதாகவும் இதனை அடுத்து பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 இந்த நிலையில் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் விருது வழங்கும் விழா மே 25ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அந்த விழாவில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்