ஸ்டேட் பர்ஸ்ட் மாணவி பாலியல் பலாத்கார வழக்கு - துப்பு தந்தால் 1 லட்சம் பரிசு
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (09:57 IST)
ஹரியானாவில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த குற்றத்தை தடுக்க அரசு முயற்சி செய்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாத சில ஜென்மங்கள் தொடர்ந்து தங்களது பாலியல் வன்கொடுமைகளை அரங்கேற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
ஹரியானாவில் சிபிஎஸ்இ தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று பிரதமர் மோடியிடம் விருது வாங்கிய 19 வயதுப் பெண்ணை கடந்த 12-ஆம் தேதி ஒரு அயோக்கிய கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின் அந்த பெண்ணை தூக்கிவீசி விட்டு சென்றனர்.
இந்த சம்பவம் இந்தியாவையே புரட்டிப்போட்டது. போலீஸார் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு தனிப்படைகளை அமைத்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என ஹரியானா முதல்வர் கூறினார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்த பெண் தன்னை பலாத்காரம் செய்தவர்களில் 3 பேரின் விவரங்களை கூறியுள்ளார். அந்த மூவரில் ஒருவன் ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றியவன் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையே போலீஸார் அந்த 3 அய்யோக்கியன்களின் போட்டோக்களை வெளியிட்டுள்ளனர். இவர்களைப் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.