இதையடுத்து, சஹானா தன் குழந்தையுடன் வண்டித்தனத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, சாஹானாவின் தாய் வீட்டிற்குச் சென்று மனைவியை தாக்கிவிட்டு குழந்தையை தூக்கி தன் வீட்டிற்கு வந்துள்ளார் நவ்பால்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சஹானா தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று, பிரேதத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.