அரசு அலுவலகங்கள் மூடப்படும் - உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு

புதன், 28 ஏப்ரல் 2021 (20:56 IST)
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களைத் இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழ்நாடு. கர்நாடகம், தெலுங்கான, டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அம்மாநில அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், உத்தராகண் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மே 1 வரை மூடப்படும் என தெரிவித்துள்ளது.

இதனால் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து கணிணி மூலமாக பணிமேற்கொள்வார்கள் என தெரிகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்