பிரபல நடிகருக்கு ஜோடியான'' குக் வித் கோமாளி'' பிரபலம்

புதன், 28 ஏப்ரல் 2021 (18:31 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளின் ஒருவரான பவித்ரா பிரபல நடிகர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஷிவாங்கி. இதையடுத்து, குக் வித் கோமாளியில் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பிரபலமானதால் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தது. இந்நிலையில்,. தற்போது

சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் அவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜா நடிப்பில் உருவாகும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளாதக் தகவல் வெளியாகிறது.நடிகர் புகழ் விஜய்65, மற்று அருண்விஜய் படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் மற்றொரு குக்வித் கோமாளி பிரபலம் பிரபல நடிகரின் படத்தில்
நடிக்கவுள்ளார்.

ஷார்ட் பிலிம்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடித்துப் மேலும் பிரபலமானார்.

தற்போது காமெடி நடிகர் சதீஸுக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

அதேபோல், மேலும் ஒரு படத்தில் பவித்ரா நடிக்கவுள்ளார்.  இப்படத்தில்  பிரபல நடிகருக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கவுள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்