சமீபத்தில் ஐந்து மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் மிசோரம் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நான்கு மாநிலங்களில் இரண்டு மாநிலங்களில் கிட்டத்தட்ட காங்கிரஸ் ஆட்சியை பிடித்து விட்டது என்பதும் அதேபோல் இரண்டு மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்து விட்டது என்பது முன்னணி நிலவரங்களில் இருந்து தெரிய வருகிறது.