தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்.. என்ன ஆச்சு சந்திரசேகர ராவ் ஆட்சி?

ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (09:06 IST)
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சந்திரசேகர் ராவ் அவர்களின் பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. 
 
ஆனால் தற்போது முன்னணி நிலவரங்கள் வந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது காங்கிரஸ் கிட்டத்தட்ட ஆட்சியைப் பிடித்து விட்டதாகவே தெரிகிறது. 
 
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் 55 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. ஆளும் பிஆர்எஸ் கட்சி வெறும் 35 தொகுதிகளில் மட்டும்தான் முன்னணியில் உள்ளது. 20 தொகுதிகள் வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் இனி மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.
 
பாஜக வெறும் மூன்று தொகுதிகளில் மட்டும் முன்னணியில் உள்ளது என்பதும் ளகுறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 60 தொகுதிகள் வென்று விட்டால் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நிலையில் காங்கிரஸ் கிட்டத்தட்ட ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பத்து ஆண்டுகளாக தெலுங்கானா மக்களின் நன் மதிப்பை பெற்று இருந்த சந்திரசேகர் ராவ் திடீரென ஆட்சியை இழப்பது  பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்