அதேபோல் திரைப்படங்களில் பணியாற்ற தெலுங்கானா ஃபிலிம் சேம்பர் அவருக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கோவாவில் வைத்து நடன இயக்குனர் ஜானியை கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரி ஒன்றுக்குள் நுழைந்து சண்டையிட்டதற்காக சிறை சென்ற நிலையில் தற்போது பாலியல் புகாரில், ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.