5 மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம்: விவசாயிகள் சங்கம் முடிவு!
செவ்வாய், 2 மார்ச் 2021 (20:54 IST)
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் ஐந்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் பல்வேறு கட்ட அதிரடி போராட்டங்களை நடத்திய விவசாயிகள் சங்கத்தினர் தற்போது ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளோம் என்று அறிவித்துள்ளனர்
எந்த கட்சியையும் ஆதரிக்காமல் பாஜக வேட்பாளரை தோற்கடிக்க கூடியவர்களுக்கு வாக்களியுங்கள் என்று பரப்புரை மேற்கொள்வோம் என்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் பாரதிய கிசான் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது