பயிர்களுக்கு MSP-ஐ உறுதி செய்ய புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேரணி இன்று நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விவசாயிகள் பேரணியை தடுக்க மத்திய அமைச்சர்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து 200க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று டெல்லியில் நுழைகின்றன