புதுச்சேரி தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவன், அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். மாணவன் தொடர்ந்து அந்த பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
அந்த பெண் தொடர்ந்து அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு அவரை விட்டு விலகி இருக்குமாறு கூறியுள்ளார். இதில் கோபமடைந்த மாணவன், அந்த பெண்னை பழிவாங்க நினைத்து ஃபேஸ்புக்கில் போலி கணக்கு ஒன்று தொடங்கினார்.