சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவு..!

Siva

செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (07:36 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியா சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தனது ஸ்டைலில் தெரிவித்தார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
 
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த சூப்பர் ஸ்டார் 
ரஜினிகாந்த்  சார் 
 
நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது சூப்பர் ஸ்டார் அவர்களைச் சந்தித்தோம். அப்போது "மாண்புமிகு முதலமைச்சர்  முக ஸ்டாலின்  அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசுப் பள்ளி மாணவர்களை பன்னாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றோம்.
 
அவ்வகையில் இது 8வது பயணம். தற்போது மலேசியா சென்றுள்ளார்கள் மாணவர்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள்" என மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டோம். தனது ஸ்டைலில் வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் அவர்கள்.
 
"தங்களின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம். அது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்" என தெரிவித்து விடை பெற்றோம்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்