கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், கோலார் தங்க வயல், ஹனூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதற்காக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.