ஆம், கடந்த 11 நாட்களில் நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஒரேநாளில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27, 31 ஆகிய தினங்களை தொடர்ந்து நேற்று மீண்டும் ஒரே நாளில் 1 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 கோடியே 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.