ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு

வியாழன், 7 டிசம்பர் 2017 (13:35 IST)
ஆதார் எண்ணுடன் பான் எண், வங்கிக்கணக்கு உள்பட பல்வேறு ஆவணங்களை இம்மாதம் 31ஆம் தேதிக்குள் இணைக்க மத்திய அரசு கெடு விதித்திருந்த நிலையில் தற்போது மேலும் மூன்று மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி ஆதார் எண்ணை வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் 31 வரை இணணத்து கொள்ளலாம்

ஆதார் எண்ணை பான் கார்டு, வங்கி கணக்கு, பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட், இன்சூரன்ஸ் பாலிசிகள், தபால் நிலைய திட்டங்கள், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, பத்திரங்களுடன் டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஒருசில வங்கிகள் இப்போதே ஆதார் இணைக்காதவர்களின் கணக்கை நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் இன்று அட்டர்னி ஜெனரல் ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில் மொத்தம் 139 சேவைகள் மற்றும் திட்டங்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க 2018 பிப்ரவரி வரை கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடு நீட்டிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்