குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள்

சனி, 12 ஜூன் 2021 (15:41 IST)
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் தினம் கடந்த 14 ஆண்டிகளாகக் கொண்டாடப்படுகிறது.  இந்நிலையில் வீட்டுச் சூழ்நிலையில் குழந்தைகள் படிக்கும் வயதில் வேலைக்குச் செல்வது அடுத்த தலைமுறையினரின் கல்வியும் சிந்தனையும் வீணாக்கப்படுகிறதோ என சமூக ஆர்வர்களும் தொண்டு சேவை நிறுவனங்களும் கவலைப்படுகிறனர்.

ஊர்களிலும்,பேருந்து நிலையங்களிலும், தொழிற்கூடங்களிலும்  14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இன்றும் வேலை செய்து வருகின்றனர். ஆனால் அவர்களைப் படிப்புக்கு அனுப்பிவிட்டால் வீட்டில் வருமானம் குறைந்துவிடும் என நினைத்து அவர்களின் எதிர்காலத்தை பற்றிக் கவலைப்படாமல் உள்ள உற்றார் உறவினர்களுக்கு அரசின் சலுகையும், அரசுப் பள்ளிக்கூட்டங்களில் இலவச சத்துணவுகள், சீருடைகள், மத்திய அரசின் காலர்ஷிப் பெருவதற்கான பரீட்சை போன்ற விஷயங்களை அறிந்துகொண்டால் இதுபோன்ற சூழல் வராமல் தவிர்க்கலாம். இதற்கு ஆசிரியர்களும், அனைத்து மீடியாக்களும்,பத்திரிக்கைகளும், மாணவர்களும் மாணவர்கள் முழுமையாய் கல்வியை நிறைவு செய்ய விழிப்புணர்வு ஊட்டலாம்.

இருப்பினும், இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில், 14 வயதிற்குக் கீழேயிருக்கும் குழந்தைகள் அவர்களின் பாரம்பரியமான துறையில் வேலை செய்வது சட்டப்படி குற்றமில்லை எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் குழந்தைத்தொழிலாளர் விகிதம் குறைந்தால்தான் அரசின் அத்தனை திட்டங்களும் ஏழைக்குழந்தைகளுக்குச் சென்றடைந்து, குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை குறையும்.


 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்