ஐசிசி தொடர்களில் இந்தியாவை ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து!

வெள்ளி, 11 ஜூன் 2021 (12:14 IST)
ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி நியுசிலாந்து அணியிடம் மிக அதிகமான அளவில் தோல்வி அடைந்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுவரை நடந்துள்ள ஐசிசி தொடர்களில் பெரும்பாலனவற்றில் நியுசிலாந்து அணி இந்தியாவை வென்றுள்ளது. இதில் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2016 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகள் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்